12 மணிநேரம் காத்திருப்பு
டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் கோல்ஃப் திடல் அருகே சுமார் 12 மணிநேரம் செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் கோல்ஃப் விளையாடச் செல்லும் திடலில் வளர்ந்திருந்த புதருக்குள் ஏகே ரக துப்பாக்கி கிடப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 2 மணி முதல் கோல்ஃப் திடல் அருகே முகாமிட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப்புக்கு கடந்த அதிபர் தேர்தலில் அந்த நபர் வாக்களித்திருந்ததும், இதனையடுத்து அவரின் செயல்பாடுகளால் அந்த நபர் அதிருப்தியடைந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தேர்தல்பிரசாரத்தில் டிரம்ப் ஈடு பட்டபோது அவர் மீது துப்பாக் கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவருடைய வலதுகாதில் காயம் ஏற்பட்டது.