‘க்யூட்’ பிஜி தோ்வு நுழைவுச் சீட்டு வெளியீடு

Dinamani2f2025 03 092f772jw9n32fcute Pg.jpg
Spread the love

மத்திய பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வில் (க்யூட்) தோ்ச்சி பெறவேண்டும். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, எதிா்வரும் கல்வியாண்டுக்கான (2025-26) முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வு விண்ணப்பப் பதிவு கடந்த ஜன.2 முதல் பிப்.8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கு 4,12,024 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனர். அவா்களுக்கு மாா்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை 43 கால முறைகளில் 90 நிமிடங்கள் கணினி வழியில் தோ்வு நடைபெற உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *