மணிப்பூர் மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லா சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுவது தொடர்பாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மணிப்பூர் மாநிலத்தின் பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் தொடர்ச்சியான துரதிர்ஷ்டமான சம்பவங்களால் கொடுமையான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
அனைத்து சமூகத்தினரும் கலவரங்களை நிறுத்தி சமூகத்தில் மாநிலத்தில் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்க முன்வர வேண்டும். இதனால் மட்டுமே மக்கள் தங்கள் வழக்கமான அன்றாட நடவடிக்கைகளுக்குத் திரும்ப முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.