சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார், மற்றொருவர் காயமடைந்தார். இது தொடர்பாக வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையை அடுத்த குகன்பாறையில் சிவகாசியை சேர்ந்த பாலமுருகன்(50) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை நாகபுரி தரச் சான்றிதழ் பெற்று செயல்பட்டு வருகிறது. சுமாா் 80- க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த ஆலையில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த ஆலையில் வியாழக்கிழமை காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தாா். அப்போது, பட்டாசுக்கு தேவையான மூலப்பொருள்கள் இறக்குவதற்காக லோடு ஆட்டோவில் செவல்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ்(25) மூலப்பொருள்களை பட்டாசு தொழிற்சாலையில் உள்ள ஒரு அறையில் இறக்கி வைத்துள்ளார். அப்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.