ரிஷப் பந்த்தா? சஞ்சு சாம்சனா?
காயத்திலிருந்து குணமடைந்து ரிஷப் பந்த் இந்திய அணிக்காக நன்றாக விளையாடி வருகிறார். மறுபுறம், கடந்த ஆண்டில் மட்டும் சர்வதேச டி20 போட்டிகளில் 3 சதங்கள் விளாசி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தன்னை தவிர்க்க முடியாத போட்டியாளராக மாற்றிக் கொண்டுள்ள சஞ்சு சாம்சன். இவர்களில் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நீண்ட தொடரில் ரிஷப் பந்த் விளையாடி முடித்துள்ளதால், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என உணர்வதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.