சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவுக்கு கொண்டு வருவோம்: ஹார்திக் பாண்டியா

Dinamani2f2025 01 222f9rl1oz6s2fap25021487324007.jpg
Spread the love

இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா சாம்பியன்ஸ் டிராபியை மீண்டும் வெல்வோம் எனக் கூறியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது.

பாதுகாப்பு காரணத்துக்காக பாகிஸ்தான் பயணிக்க இந்திய அணி மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஒருநாள் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை ஊக்கப்படுத்தவும் அதன் மதிப்பைக் கூட்டவும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இந்தத் தொடர் ரசிகர்கள், வீரர்களிடையே மீண்டும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இந்திய அணியினர்கள் தனித்துவமாக விளையாடி மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் எனக் கூறியுள்ளார்.

கடைசியாக தோனி தலைமையில் இந்திய அணி 2013இல் கோப்பை வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக 2002இல் இந்தியா – இலங்கை அணிகள் கோப்பையை பகிர்ந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் போட்டி பிப்.20ஆம் தேதி தொடங்குகிறது. அதில் வங்கதேசம் அணியுடன் மோதுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *