சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் செல்ல பிசிசிஐ மறுப்பு!

Dinamani2f2024 11 082ffngyh85m2f38bn52v8rohit Sharma Babar Azam Afp625x30028august22.jpg
Spread the love

சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடருக்கு பாகிஸ்தானுக்குச் செல்ல இந்திய கிரிக்கெட் கவுன்சில் மறுப்பு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இத்தொடரின் போட்டிகளை பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடத்தப்படவுள்ளது.

தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு 16 ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.

இதனால், பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றாலும், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *