நான் திரும்பி வந்துவிட்டேன். தடைப்பட்ட பணிகள் அனைத்தும் மீண்டும் தொடங்கப்படும் என்பதை மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என்று கேஜரிவால் கூறினார்.
கேஜரிவால் கலால் கொள்கை வழக்கில் ஐந்து மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட பின்னர் இந்த மாத தொடக்கத்தில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த வாரம் தில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகிய அவர், பிப்ரவரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தில்லி மக்களிடமிருந்து நேர்மைக்கான சான்றிதழைப் பெற்ற பிறகு மீண்டும் பதவிக்கு வருவேன் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.