சூது கவ்வும் – 2 வெளியீட்டுத் தேதி!

Dinamani2f2024 11 202f7ss822h12fscreenshot 2024 11 20 164335.png
Spread the love

சூது கவ்வும் – 2 படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும் திரைப்படம் வெளியானது. இதில் சஞ்சிதா ஷெட்டி, ரமேஷ் திலக், அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இதில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்து உள்ளார். படத்தின் முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கியுள்ளார்.

இதையும் படிக்க: சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா?

ஹரிஷா, ராதாரவி, கருணாகரன், எம்எஸ் பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *