சென்னை சங்கமம் நிகழ்ச்சியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!

Dinamani2f2025 01 172fi2y1ls3s2fstalin.jpg
Spread the love

சென்னையில் நடத்தப்பட்ட சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த சென்னை சங்கமம் விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள கோபுரப் பூங்காவில் இன்று நடைபெற்ற சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் நேரில் கண்டு மகிழ்ந்தார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை!

அப்போது மல்லர் கம்பம் ஏறி சாகசம் செய்த மாற்றுத்திறனாளிகளை முதல்வர் ஸ்டாலின் மேடையேறிச் சென்று பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, ஆ.ராசா எம்.பி., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பொங்கல் திருநாளையொட்டி, தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு விழாவை கீழ்ப்பாக்கம் பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதா் ஆலயத் திடலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முழவுக் கருவியை இசைத்து தொடங்கிவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *