ஜிபிஎஸ் நோயால் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

Dinamani2fimport2f20212f12f192foriginal2fcoronaupdates.jpg
Spread the love

கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பதால் மகாராஷ்டிரத்தில் மக்களிடையே அச்சம் குடிகொண்டுள்ளது.

புணே நகரில் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 37 வயது நபர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக இன்று(பிப். 10) தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அரியவகை இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 192-ஐ தொட்டுள்ளது. அவர்களில் 48 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 21 பேர் செயற்கை சுவாசக் கருவியான வெண்டிலேட்டர் உதவியுடனும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் காரணமாக உடலில் உருவாகும் ஜிபிஎஸ் பாதிப்பு பல காலமாக சமூகத்தில் இருந்தாலும், அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் புணேவிலும், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலும் அந்தப் பாதிப்பு தீவிரமாக பரவியது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக திருவள்ளூரைச் சோ்ந்த 9 வயது சிறுவன் எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

சுகாதாரமற்ற நீா், உணவில் ஜிபிஎஸ் நோயை பரப்பும் பாக்டீரியாக்கள் காணப்படுவதால் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். பால் மற்றும் இறைச்சியை முறையாக கொதிக்க வைத்து சமைக்காவிடில் அதிலிருந்து கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயைப் பரப்பும் பாக்டீரியா உருவாகலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

ஜிபிஎஸ் பாதிப்பு ஏற்பட்டால் தொடக்கத்தில் உள்ளங்கை மற்றும் பாதத்தில் ஊசி குத்தியது போன்ற வலியும், மந்தமான உணா்வும் ஏற்படலாம். நாளடைவில் தசைகள் தளா்ந்து நடக்க முடியாமலும், கைகளை அசைக்க இயலாமலும் பக்கவாத நிலை உருவாகக் கூடும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *