மேற்கு வங்கத்தில் ஜேசிபி மோதி சிறுவன் பலியான சம்பவத்தில் போராட்டக்காரர்களை திரிணமூல் கட்சியினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெற்கு கொல்கத்தாவின் பன்ஸ்ட்ரோனி பகுதியில் புதன்கிழமை (அக். 2) காலையில் டியூஷன் சென்று கொண்டிருந்த 9 ஆம் வகுப்பு மாணவர் மீது ஜேசிபி வாகனம் மோதியது. இதனையடுத்து, சிறுவனை அப்பகுதி மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இருந்தபோதிலும், செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய ஜேசிபியின் ஓட்டுநர், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்; அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தின் காரணங்களாக சாலையின் மோசமான நிலை, தாமதமாகும் புனரமைப்பு பணி, காவல்துறையினரின் அலட்சியம் முதலானவைதான் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.