தமிழக ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

Dinamani2f2024 10 262f0wpjnbmd2fvijai.jpg
Spread the love

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சந்திக்கவுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா்.

இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், இன்று பகல் 1 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்திக்கவுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த சந்திப்பின்போது, அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மனு அளிக்கவுள்ளார்.

இதையும் படிக்க : நாகை – இலங்கை படகு சேவை: புத்தாண்டில் மீண்டும் தொடக்கம்!

முன்னதாக, விஜய் தனது கைப்பட எழுதிய கடித்தை வெளியிட்டார். அதில் தெரிவித்திருப்பதாவது:

“அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பும் பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இந்த கடிதம்.

எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும் அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கனை உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *