தமிழக மக்களின் உரிமைக்காக எனது குரல் என்றும் ஒலிக்கும் என்று பாஜவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், என் அன்பு சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி.
தமிழக மக்களின் உரிமைக்காக எனது குரல் என்றும் ஒலிக்கும்!
வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தாமரை சொந்தங்கள் அனைவரும், நயினார் நாகேந்திரன் தலைமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, திமுகவை வீழ்த்துவது என்ற ஒற்றை இலக்கை நோக்கி ஒருங்கிணைந்து பயணிப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.