தமிழக மீனவர்களுக்கு இலங்கை சுதந்திரம்: தேமுதிக கோரிக்கை | DMDK demands Sri Lankan independence for Tamil Nadu fishermen

1349602.jpg
Spread the love

இலங்கை சுதந்திர பெற்ற நாளை முன்னிட்டு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை தேடித்தான் மீன் பிடிக்க வருகின்றனர். அவர்களை அத்துமீறி கைது செய்து, அவர்களது உடைமைக்கும், உயிருக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களை சிறைபிடிப்பது போன்றவை தொடர்கதையாகி வருகின்றன. இது கண்டனத்துக்குரியது.

தமிழக மீனவர்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பையும், மனவேதனையையும் இவை உருவாக்கி இருக்கின்றன. இன்றைக்கு (நேற்று) ‘இலங்கை சுதந்திரம் பெற்ற நாள்’. இந்நாளில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சுதந்திரத்தை வழங்கி மனித நேயத்தோடு நீதியையும், நேர்மையையும் நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *