தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, பாடல் இன்று அறிமுகம்: கட்சித் தலைவர் விஜய் அறிவிப்பு | tamizhaga vetri kazhagam Flag and Song to Launched Today Vijay

1299068.jpg
Spread the love

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடல் ஆகியவை இன்று அறிமுகம் செய்யப்படும் என்று கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதற்காக பனையூரில் உள்ளகட்சித் தலைமையகத்தில் நடைபெறும் விழாவில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என்.ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என்றும் விஜய் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கட்சியில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து நிலையிலான நிர்வாகிகளும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே அவர் நடித்த ‘தி கோட்’ என்ற திரைப்படத்தின் பணிகள் முடிந்த நிலையில், கட்சிப் பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். இதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு, கட்சிக் கொடியை அறிமுகம் செய்வது ஆகியவை குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்துடன் விஜய் அவ்வப்போது ஆலோசனை நடத்தினார். இதில், மாநாட்டுக்கு முன்பாகவே கட்சியின் கொடியை அறிமுகம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கடந்த 19-ம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மஞ்சள் நிறத்துடன் நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கட்சிக் கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (ஆக.22) காலை 9.15 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில்பங்கேற்று கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்து ஏற்றி வைப்பதோடு, கொடி பாடலையும் வெளியிடுகிறார்.

நிகழ்ச்சியில், பங்கேற்க 300-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் காலை 6 மணிக்கே தலைமையகத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி நீலங்கரை, கானாத்தூர் காவல் நிலையங்களில் நிர்வாகிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சொந்த இடத்தில் நிகழ்ச்சி நடைபெறுவதால், விஜய் செல்லும் வழித்தடத்தில் மட்டும் பாதுகாப்பு வழங்க போலீஸார் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் கட்சியின் கொடி எந்த நிறத்தில் இருக்கும் என்று தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் நடுவில் விஜய் முகம் இருக்கும் வகையிலான கொடி வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கட்சிக் கொடி அறிமுகம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியானவரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் ஆக.22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம்வீரக் கொடியை, வெற்றிக் கொடியை நம் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தி, கட்சிக் கொடி பாடலை வெளியிட்டு கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெரு மகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *