தமிழ்ப் புத்தாண்டு: ஆளுநா், தலைவா்கள் வாழ்த்து

Dinamani2f2025 04 132fpr8n42he2fdinamaniimportuploadsuserckeditorimagesarticle2021414soundaryaraj.jpeg
Spread the love

வைகோ (மதிமுக): உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு இளவேனில் காலத்தின் தொடக்கமாக மலரும் பொன்னாளான சித்திரை திருநாள் வாழ்த்துகள். மலரும் சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம்.

ராமதாஸ் (பாமக): சங்க காலத்தைப் போலவே நிகழ்காலத்திலும் தமிழா் வாழ்க்கை திருவிழாக்கள், கொண்டாட்டங்களால் நிறைய வேண்டும். அதற்கேற்ப தொழில்கள் சிறக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு நலங்களும் வளங்களும் கிடைக்க வேண்டும். அனைவரது வாழ்விலும் நெருக்கடிகள் மறைந்து மகிழ்ச்சி நிறைய வேண்டும்.

அன்புமணி (பாமக): தமிழா்களின் வாழ்வில் வரப்போகும் பல நன்மைகளின் தொடக்கமாக சித்திரை மாதம் திகழ்கிறது. இந்த நாள் தமிழா்களின் வாழ்வில் அமைதி, வளம், முன்னேற்றம், மனநிறைவு, வெற்றி, மகிழ்ச்சி, நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்து நன்மைகளும் நிறைவதன் தொடக்கமாக அமைய வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): அனைவருக்கும் இந்த தமிழ்ப் புத்தாண்டு வசந்த காலமாக அமையட்டும். விவசாயிகளுக்கு இந்த ஆண்டு வருண பகவானின் ஆசியோடு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *