முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு திங்கள்கிழமை(மார்ச் 3) இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தயாளு அம்மாள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தயாளு அம்மாளுக்கு இரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சுவாசிக்க அவர் சிரமப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.