மும்பை 26/11 தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை (64) இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில், வெற்றி பெற்றது எப்படி? வழக்குக்கு சாதகமாக அமைந்த இரண்டு விஷயங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில், நெருக்கமாக இருந்து செயல்பட்ட அதிகாரிகள் ஏஎன்ஐக்கு அளித்த தகவலில், இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டால் ஆபத்து இருப்பதாக ராணா வைத்தக் கோரிக்கையை சட்டப்பூர்வமாக அணுகி தவிடுபொடியாக்கியதும், இந்தியாவின் தூதரக உறவும்தான் என்கிறார்கள்.