தாம்பரம் – மேல்மருவத்தூர் இடையே கூடுதல் பயணிகள் ரயில் இயக்க மக்கள் கோரிக்கை | People who come to chennai demand for additional trains for tambaram to melmaruvathur route

1351805.jpg
Spread the love

மதுராந்​தகம் மற்றும் அதன் சுற்றுப்பு​றங்​களில் உள்ள 40-க்​கும் மேற்​பட்ட கிராமங்​களில் இருந்து சென்னைக்கு பணிக்கு செல்​லும் பொது​மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்​களின் போக்கு​வரத்​துக்காக தாம்​பரம் ​ -மேல்​மரு​வத்​தூர் இடையே கூடுதல் ரயில்கள் இயக்​க​வும் அனைத்து ரயில்​களை​யும் நிறுத்தி இயக்​க​வும் காஞ்​சிபுரம் எம்.பி. நடவடிக்கை எடுக்க வேண்​டும் என சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்​துள்ளனர்.

செங்​கல்​பட்டு மாவட்டம் மதுராந்​தகம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்​களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்​றனர். மதுராந்​தகம் நகரை சுற்றி உள்ள 40-க்​கும் மேற்​பட்ட கிராமங்​களில் வசிக்​கும் பொது மக்கள், பணிக்கு செல்​வோர், பள்ளி, கல்வி நிறு​வனங்கள் செல்வது உட்பட பல்வேறு தேவை​களுக்​காக, நகரபகுதி​யில் இருந்து ரயில் மூலம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதி​களுக்கு சென்று வருகின்​றனர்.

இதனால், மதுராந்​தகம் ரயில் நிலை​யத்​தில் நாள்​தோறும் ஆயிரக்​கணக்கான பயணிகள் வந்து செல்​கின்​றனர். எனினும், மேற்​கண்ட ரயில் நிலை​யத்​தில் இருந்து செங்​கல்​பட்டு, தாம்​பரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதி​களுக்கு நேரடி ரயில் சேவை ஏற்படுத்​தப்​படாமல் உள்ளது. அதனால், தென்​மாவட்​டங்​களில் இருந்து வரும்விரைவு ரயில்​களில் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதிலும், குறிப்​பிட்ட சில ரயில்கள் மட்டுமே இங்கு நிறுத்தி இயக்​கப்​படு​வ​தாக​வும், அதிலும் சாதாரண வகுப்பு பெட்​டிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவ​தால், ரயிலில் தொங்​கியபடி ஆபத்தான நிலை​யில் பயணிக்​கும் நிலை உள்ள​தாக​வும், இதனால் தாம்பரம்​ – மேல்​மரு​வத்​தூர் இடையே காலை மற்றும் மாலை​யில் கூடு​தலாக பயணிகள் ரயில்கள் இயக்க காஞ்​சிபுரம் எம்.பி. நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று மதுராந்​தகம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்​துள்ளனர்.

சரத்குமார்

இதுகுறித்து, மதுராந்​தகம் ரயில் பயணிகள் சங்கத்​தின் பொருளாளர் சரத்​கு​மார் கூறிய​தாவது: மதுராந்​தகம் தாலுக்​காவை சுற்றி இருக்​கும் 2 சட்டப்​பேரவை தொகு​தி​களுக்​குட்​பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்​கணக்கான பொது​மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நாள்​தோறும் ரயிலில் பயணம் செய்​கின்​றனர். ஆனால், மதுராந்​தகம் ரயில் நிலை​யத்​தில் போதிய ரயில்கள் நின்று செல்​லாத​தால் பொது​மக்கள் பல்வேறு சிரமங்​களுக்கு ஆளாகி வருகின்​றனர்.

அதேபோல், மதுராந்​தகம் ரயில் நிலை​யத்​தில் அனந்​த​புரி, முத்​துநகர் விரைவு ரயில்கள் அதிகாலை 6:30 மணிக்கே கடந்து சென்று விடு​கின்றன. இதன்​பிறகு, விழுப்பு​ரம்​-​தாம்​பரம் ரயில் மட்டுமே உள்ளது. அதன்​பிறகு, போதிய ரயில்கள் நிறுத்தி இயக்​கப்​படு​வ​தில்லை.

புதுச்​சேரி – திருப்பதி ரயில் காலை​ 10 மணிக்கு பிறகே மதுராந்​தகம் ரயில் நிலை​யத்தை கடந்து செல்​கிறது. இதனால், காலை​யில் பணிக்கு செல்​லும் நபர்கள் மற்றும் மாணவர்​களுக்கு இந்த ரயில் மூலம் உபயோகம் இல்லை. இரவிலும் சென்னையி​லிருந்து, மதுராந்​தகம் திரும்ப 8:30 மணிக்கு கடைசி ரயில் உள்ளது. அதன் பிறகு ரயில்கள் இல்லை. அதனால், காலை​யில் 6:30 மணிக்கு மேல் மற்றும் 9 மணிக்​குள்​ளும் இரவில் சென்னை அல்லது தாம்​பரத்​தில் இருந்து 9 மணிக்கு மேல்​மரு​வத்​தூர் வரையிலும் கூடு​தலாக ரயில்கள் இயக்​கினால், மதுராந்​தகம் சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பயனடைவார்​கள்.

மேற்​கண்ட கோரிக்கை தொடர்​பாக, மதுராந்​தகம் எம்எல்ஏவை தொடர்​பு​கொள்ள முடிய​வில்லை. மேலும், காஞ்​சிபுரம் எம்.பி.​யிடம் மனு அளித்​துள்ளோம். இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்​கப்​பட​வில்லை. அதனால், எம்எல்ஏ மற்றும் எம்.பி. ஆகியோர் கள ஆய்வு செய்து கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்றார்.

மதுராந்தகம் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான

சாய்தளம் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரயில் பயணிகள் கூறிய​தாவது: ரயில்கள் இயக்​கப்​படுவது தொடர்பாக காஞ்​சிபுரம் எம்.பி.யை தொடர்பு கொள்ள முடிய​வில்லை. அதேநேரத்​தில், மதுராந்​தகம் அருகே​யுள்ள ரயில் நிலை​யங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஆனால், மதுராந்​தகம் ரயில் நிலையம் இன்னும் வளர்ச்​சியை தொடங்​க​வில்லை. போக்கு​வரத்து வசதி​யிருந்​தால் மட்டுமே நகரம் வளர்ச்​சி​யடை​யும். சென்னைக்கு மதுராந்​தகம் நகரிலிருந்து எத்தனை ரயில்கள் இயக்​கப்​படு​கின்றன. அருகில் உள்ள செங்​கல்​பட்டு ரயில் நிலையம் வளர்ச்சி அடைந்​து​விட்​டது.

மதுராந்​தகத்தை அடுத்த மேல்​மரு​வத்​தூர் பகுதி​களுக்கு ஏன் ரயில்கள் இயக்க தயக்கம் காட்டு​கின்​றனர்? ரயில் வசதி​யில்​லாத​தால் பள்ளி, கல்லூரி மாணவர்​கள், அரசு மற்றும் தனியார் பேருந்​துகளில் கூட்ட நெரிசலில் படிக்கட்டு​களில் தொங்கி ஆபத்தான நிலை​யில் பயணிக்​கும் அவலம் உள்​ளது. அத​னால், ​தாம்​பரம் – மேல்​மரு​வத்​தூர் இடையே கூடு​தல் ர​யில்​களும் மதுராந்​தம் ர​யில் நிலை​யத்​தில் ​காலை மற்றும் ​மாலை​யில் அனைத்து ர​யில்​களை​யும் நிறுத்தி இயக்​க​வும் எம்​.பி. மற்றும் எம்​எல்ஏ நட​வடிக்கை எடுக்க வேண்டும்​ என்​றனர்​.

காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் கூறியதாவது: மதுராந்தகம் ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்தி இயக்க வேண்டும் மற்றும் தாம்பரம் – மேல்மருவத்தூர் இடையே கூடுதல் மின்சார ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக, என்னை சந்திக்க முடியவில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல. அனைத்து தரப்பு மக்களிடமும் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். மேற்கண்ட கோரிக்கை தொடர்பாக ரயில்வே துறைக்கு மனு மற்றும் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளேன் என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *