திடீர் முடி உதிர்வு..வழுக்கையாகும் நிலை! பொதுமக்கள் அச்சம்!

Dinamani2f2025 01 112fu4uftvw52fhair.jpg
Spread the love

மகாராஷ்டிர மாநிலத்தின் புல்தான மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்களின் பொதுமக்கள் சிலருக்கு திடீரென வழக்கத்தை விட அதிகமான தலைமுடி உதிர்ந்து, வழுக்கையாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அம்மாவட்டத்தின் ஷேகான் தாலுக்காவிற்கு உள்பட்ட பாண்ட்கான், கல்வாட், கதோரா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வழக்கத்தை விட அதிகமான தலைமுடி கொட்டுவதினால் வழுக்கை ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த கிராமவாசிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அந்த கிராமங்களில் வசிக்கும் சுமார் 55 பேருக்கு, உச்சந்தலையில் அரிப்பு ஏற்பட்டு, பின்னர் நாளடைவில் முடி உதிரத் துவங்கி 3 முதல் 4 நாள்களில் அவர்களது தலை வழுக்கையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் சுகாதாரத் துறை, இந்த திடீர் முடியுதிர்விற்காக காரணத்தை கண்டறிய ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த திடீர் பிரச்சனைக்கான காரணம் என்னவென்று கண்டுபிடிக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் ஷாம்பூக்களை பயன்படுத்தியதினால் ஏற்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இதையும் படிக்க: தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு: ஆம் ஆத்மி எம்எல்ஏ பலி! விபத்தா? கொலையா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *