டிக்கெட் விநியோகத்தில் தேவஸ்தானத்தின் முறையான திட்டமிடாத நிர்வாகக் குறைபாடே காரணம் என பலர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதற்கு முன்னதாக, விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில் அதிகாரிகள் சரியாக நிலைமையைக் கையாளவில்லை என்று அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட இரு அதிகாரிகளை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
திருப்பதி காவல் கண்காணிப்பாளர் எல்.சுப்பாராயுடு, இணை ஆணையர் கெளதமி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்தார். மேலும், மோசமாகக் காயமடைந்தோருக்கு ரூ. 5 லட்சமும், லேசான காயம் அடைந்தோருக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்தார்.
இதையும் படிக்க | அனைவருமே செத்துவிடுவோம் என நினைத்தேன்: திருப்பதியில் உயிர் பிழைத்தவர் தகவல்