சென்னை: திரைப்படத் தயாரிப்பாளர் எம்.ராமநாதன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.
ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த எம். ராமநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ளதொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று(ஏப். 7) உயிரிழந்தார்.
சத்யராஜ் நடித்து வெளிவந்த நடிகன், வில்லாதி வில்லன், வள்ளல் உள்லிட்ட பல படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.