தில்லி தோ்தல் முடிவுகள் பிகார் தேர்தலில் எதிரொலிக்காது: தேஜஸ்வி யாதவ்

Dinamani2f2024 052f46ccaa68 Dbb2 4651 9e29 733978ee95f52ftejashwi Yadav084839.jpg
Spread the love

பாட்னா: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக பெற்றிருக்கும் வெற்றி, இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.

பிகாா் பேரவை எதிா்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்து பேசியதாவது:

ஜனநாயகத்தில் மக்கள்தான் உண்மையான மன்னா்கள். இதுதான் ஜனநாயகத்தின் அழகு. யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்கிறார்கள்.மக்களின் தீர்ப்பு எப்போதும் மதிக்கப்பட வேண்டும்.

தேசிய தலைநகர் தில்லியில் சுமாா் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. “தேர்தல் பிரசாரத்தின் போது மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை அவா்கள் நிறைவேற்றுவார்கள் என்றும், வழக்கம்போல வெறும் வாா்த்தைகளாக இருந்துவிடக் கூடாது என்று நம்புவோம் என்று கூறினார்.

மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *