சென்னை: தமிழ்நாடு அரசின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் அலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிடமாடல் அரசில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசின் துணை முதல்வர் பொறுப்பு நேற்று வழங்கப்பட்டது.
புதிய துணை முதல்வராகப் பதவி உயர்வு பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலரும் நேரில் சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அலைபேசி மூலம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.