தொடர் மழையால் மண் சரிவு: நீலகிரி மலை ரயில் வரும் 31-ம் தேதி வரை ரத்து | Nilgiri Hill Train canceled till 31st due to landslide due to continuous rains

1301193.jpg
Spread the love

குன்னூர்: தொடர் மழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில் சேவை வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் ரயில் பாதையில் கல்லாறு – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், மேட்டுப்பாளையம் – உதகை இடையே கடந்த 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால் 6-ம் தேதி மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில், கல்லாறு ஹில் குரோவ் இடையே தண்டவாளத்தின் பராமரிப்பு பணிக்காக மீண்டும் 25-ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், காலநிலையைக் கருதியும், மற்றும் ஹில் குரோவ் மற்றும் ரன்னிமேடு ரயில் நிலையங்கள் அருகே ஏற்பட்டு வரும் மண் சரிவு காரணமாகவும் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே, மலை ரயில் சேவை வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *