சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் பொருத்திய வெடிகுண்டுகள் வெடித்து 2 மத்திய ரிசர்வ் காவல் படையினர் படுகாயமடைந்தனர்.
பிஜப்பூர் மாவட்டத்தின் பஸகூடா காவல் நிலையத்தின் எல்லக்குட்ப்பட்ட காட்டுப் பகுதியில், இன்று (ஜன.16) காலை மத்திய ரிசர்வ் காவலின் 229 பட்டாலியன் படையினர் மற்றும் 206 கோப்ரா படையினரும் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நக்சல்கள் பொருத்தியிருந்த ஐ.ஈ.டி எனும் நவீன வெடிகுண்டுகளை அறியாமல் அதனை தூண்டியதில் அது வெடித்து கோப்ரா படையைச் சேர்ந்த ம்ரிதூல் பார்மன் மற்றும் முஹம்மது இஷாக் ஆகிய இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதையும் படிக்க: ரூ.2,000 கோடிக்கு களைகட்டிய சேவல் பந்தயம்! வேடிக்கை பார்த்தே ரூ.1.25 கோடி வென்ற சேவல்!