நடிகர் அஜித்துக்கு உதயநிதி வாழ்த்து!

Dinamani2f2024 10 302f7xikkelh2fajith.jpg
Spread the love

சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகர் அஜித் குமாருக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் நடைபெறும் ஜிடி4 ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட சர்வதேச கார் பந்தயங்களில் நடிகர் அஜித் குமார் கலந்து கொள்ளவுள்ளார்.

இதற்காக துபையில் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது அணியினர் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலானது.

இதையும் படிக்க : கங்குவா படத் தொகுப்பாளர் மரணம்!

துணை முதல்வர் வாழ்த்து

இந்த நிலையில், நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

“உலக அளவில் சிறப்புக்குரிய 24எச் துபை 2025 & தி ஐரோப்பியா 24 எச் சாம்பியன்ஷிப் – போர்ஷே 992 ஜிடி3 கோப்பை கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமாருக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்முடைய தமிழக விளையாட்டுத் துறையின் இலட்சினையை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், தலைக்கவசம் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித்துக்கு தமிழக விளையாட்டுத் துறை சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும்,முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் – சென்னை ஃபார்முலா 4 போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித்துக்கு எங்கள் அன்பும், நன்றியும்.

விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார் பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித்” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *