நடிகர் நிவின் பாலி நள்ளிரவில் திடீரென வைரலானது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நிவின் பாலிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே வெற்றிப்படம் என எதுவும் அமையவில்லை. காரணம், பிரேமம் படத்தில் மிக அழகாகத் தோற்றமளித்த நிவின், அதன்பிறகு மெல்ல மெல்ல அதீத எடைகொண்ட தோற்றத்திற்குச் சென்றார்.
அதே உடலுடன் சில படங்களிலும் நடித்தார். ஆனால், அவை தோல்விப் படங்களாவே அமைந்தன. இதனால், நிவினின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிக்க: விபத்தில் சிக்கிய யோகி பாபு!
இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன் நிவின் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய குழப்பமே ஏற்பட்டது. ஆனால், விசாரணையில் நிவின் குற்றமற்றவர் எனத் தெரிந்தது.
இந்த நிலையில், நேற்று (பிப்.15) நள்ளிரவு 12 மணியளவில் இன்ஸ்டாகிராமில் நிவின் பாலி இரண்டு புகைப்படங்களை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான பின்னூட்டங்கள் வந்தன. அப்படி என்ன படங்கள்? உடல் பருமனை முழுவதுமாக் குறைத்து, கச்சிதமான தோற்றத்திற்குத் திரும்பிய படங்கள்தான் அவை.

நிவின் பாலி மீண்டும் உடல் தோற்றத்தை பழைய நிலைக்குக் கொண்டு வந்ததை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன், மலையாள சினிமாவில் அடுத்த இன்னிங்ஸை நிவின் ஆரம்பிப்பார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
