முதல் போட்டியின் 8-வது ஓவரின் போது பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் குஷ்தில் ஷா ரன் எடுக்க ஓடும்போது நியூசிலாந்து பந்துவீச்சாளர் சாக் பௌல்க்ஸ் தோள்பட்டையின் மீது தேவையின்றி மோதினார்.
டி20 போட்டி விதிகளை மீறிய குஷ்தில் ஷாவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 50 சதவிகிதம் அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடுவர் ஜெஃப் க்ரோவ் விதித்த தடைகளுக்கு குஷ்தில் ஷா ஒப்புக்கொண்டதால், அவருக்கு எந்த விசாரணையும் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு ரூ. 869 கோடி இழப்பு! வீரர்களின் ஊதியம் 90% குறைப்பு!