நிறம் மாறும் உலகில்… புதிய பாடல் வெளியீடு!

Dinamani2f2025 02 272fwuut4klr2fgkzinq1wwaakzqo.jpg
Spread the love

பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ் இணைந்து நடித்துள்ள புதிய படமான ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.

அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி இணைந்து நடித்துள்ள படம் ’நிறம் மாறும் உலகில்’. இந்தப் படத்தில் யோகிபாபு, கனிகா, வடிவுக்கரசி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிக்னேச்சர் புரடக்சன்ஸ், ஜிஎஸ் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இதையும் படிக்க | கடலும் மர்மங்களும்… கிங்ஸ்டன் டிரைலர் வெளியீடு!

நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தைப் பேசும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முதல் பாடலான ’ரங்கம்மா’ சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி கவனம் ஈர்த்தது.

தேவ் பிரகாஷ் ரேகன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இரண்டாவது பாடலான ‘போய் வாடி’ இன்று வெளியாகியுள்ளது. ஏ.எஸ். தாவூத் எழுதிய இந்தப் பாடலை அனந்து பாடியுள்ளார்.

நிறம் மாறும் உலகில் மார்ச் 7 அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *