நெட்ஃபிளிக்ஸ் தொடருக்காக 44 மில்லியன் டாலர் மோசடி!

Dinamani2f2025 03 222fbpywvy8f2ftnieimport2023720originalnetflixott.avif.jpeg
Spread the love

நெட்ஃபிளிக்ஸ் தொடர் இயக்குவதாகக் கூறி, 44 மில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்டதாக ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கார்ல் எரிக் ரின்ச் கைது செய்யப்பட்டார்.

ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கார்ல் எரிக் ரின்ச், 2018 ஆம் ஆண்டில் ஒய்ட் ஹார்ஸ் என்ற தலைப்பில் இணையத் தொடரை இயக்குவதற்காக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 44 மில்லியன் டாலர் பெற்றிருந்தார். ஆனால், படத்துக்கான பணத்தை அதற்காக செலவழிக்காமல், தனது சொந்த தனிப்பட்ட செலவுகளுக்காக செலவழித்துள்ளார்.

கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் முதலீடு, ஆடம்பர சொகுசு விடுதிகள், 3.7 மில்லியன் டாலர் மதிப்பில் தளவாடங்கள் மற்றும் பழங்கால பொருட்களில் படுக்கைகள், மெத்தைகள் மற்றும் ஆடம்பர படுக்கைகளுக்கு 1 மில்லியன் டாலர், 5 ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஒரு ஃபெராரி கார், 6.5 லட்சம் மதிப்பில் கைக்கடிகாரங்கள் மற்றும் ஆடைகள், இதுதவிர 1.8 டாலருக்கு கிரெடிட் கார்டு பில்களுக்காவும் செலவழித்துள்ளார்.

இதையும் படிக்க: டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை இல்லை: கனடா பிரதமர் திட்டவட்டம்!

இதனிடையே, படத்துக்கான பணத்தை மோசடி செய்ததாகக் கூறி, கார்ல் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 12 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும், செவ்வாய்க்கிழமையில் ஒரு லட்சம் டாலர் அளித்து கார்ல் ஜாமீனில் வெளிவந்தார்.

கார்லின் மோசடி, நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள்வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இந்த நிலையில், கார்ல் மீதான கைது நடவடிக்கை குறித்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *