லாபத்தை முன்பதிவு செய்யும் முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்குச் சந்தை நல்ல லாபத்தை அளித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
லாபத்தில் உள்ள பங்குகளை விற்று முதலீட்டுடன் சேர்த்து லாபத்தை எடுத்ததே பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
2024 அக்டோபரில் இருந்து தற்போது வரை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1.56 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
2025-ல் இதுவரை (ஜனவரி, பிப்ரவரியில்) மட்டும் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை அந்நிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர்.