சென்னை கடற்கரையை ஓட்டிய பகுதிகளை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இதில், வேளச்சேரி – பரங்கிமலை இடையே உள்ள 4.5 கி.மீ. தொலைவுக்கு 167 தூண்களுடன் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 500 மீட்டா் தொலைவிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும். பணிகள் முழுவதும் நிறைவடையும் பட்சத்தில் திருவான்மியூா், மயிலாப்பூரில் இருந்து பயணிகள் பரங்கிமலை வழியாக தாம்பரம், கிளாம்பாக்கம் வரை எளிதாக செல்ல முடியும் என்றனா்.
பரங்கிமலை பறக்கும் ரயில் பணி ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்
