பரவலான திட்டங்களை உள்ளடக்கிய பட்ஜெட்: துணை முதல்வர் உதயநிதி

Dinamani2f2025 03 142f5xehpqfl2fgmapmbax0aa7smo.jpg
Spread the love

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற உயரிய லட்சியத்தோடு தமிழ்நாட்டிற்கான பரவலான திட்டங்களை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கழக எம்.எல்.ஏ.க்கள் ஆற்ற வேண்டிய பணிகள், தொகுதி மக்களின் ஏற்றத்துக்கும் – தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குமான பங்களிப்பை ஒட்டி முதல்வர் இக்கூட்டத்தில் வாயிலாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரைசினா உரையாடல்: நியூசிலாந்து பிரதமர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்பு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *