இந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் அனில் குப்தா(42), எம்டி சர்ஃபராஸ்(22) மற்றும் எம்டி காதர்(40) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்களில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கட்டட உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக என போலீஸார் கூறினார்.