பழனிசாமியை விமர்சிக்க அண்ணாமலைக்கு உரிமையில்லை: கே.பி. முனுசாமி

Dinamani2fimport2f20222f12f202foriginal2fkpmunnusamy.jpg
Spread the love

சென்னை: ஆளுமைமிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்வதற்கு அண்ணாமலைக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை பற்றி பேசியதற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையான வார்த்தைகளால் பழனிசாமியை விமர்சித்துப் பேசியிருந்தார்.

இது குறித்து அதிமுக சார்பில் கண்டனம் தெரிவித்திருக்கும் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, ஆளுமைமிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்வதற்கு அண்ணாமலைக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2026ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைவது உறுதி. அடுத்த தேர்தலில் 4வது இடத்துக்கு அதிமுக செல்லும் என்ற அண்ணாமலையின் கனவு பலிக்காது என்றும், விரைவில் அண்ணாமலையை பாஜகவிலிருந்து வெளியேற்றுவார்கள் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை தான்தோன்றித்தனமாக பேசி வருகிறார், அண்ணாமலைக்கு பயம் வந்துவிட்டது, தலைமை பொறுப்பு தமக்கு இருக்காது என்பதால், இருக்கின்ற வரையில் எதையாவது சொல்லிவிட்டு செல்லலாம் என நினைக்கிறார் அண்ணாமலை என முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையின் பேச்சு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *