இதில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,
“இந்த ரூ. 4,034 கோடி யாருடைய அப்பன் வீட்டு பணமும் கிடையாது. மத்திய அரசின் பணம். இதை நிறுத்தக் காரணம் இந்த திட்டத்தின் பெயர்தான். ‘மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அது மோடி அரசுக்கு பிடிக்கவில்லை. காந்தியை சுட்டவர்கள் அவர்கள். காந்தியின் பெயரில் இத்திட்டம் இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை அதனால்தான் பணம் தர மறுக்கிறார்கள்.
மோடி பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்ற முடியாது. பாஜக, மோடி என்று சொல்லி இனி ஓட்டுக் கேட்க முடியாது. அந்த அளவுக்கு மக்களுக்கு துரோகம் செய்துள்ளார்கள்.
மோடி அல்ல, அவன் பாட்டன் சொன்னாலும் மக்கள் பணத்தை வாங்கித் தராமல் விடமாட்டோம்” என பேசினார்.