சென்னை : பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து அன்னை தெரசா, பெரியாா் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்திலிருந்து 36 வீராங்கனைகள் சென்றுள்ளனா். 3 மேலாளா்கள், 3 பயிற்றுநா்கள் உடன் சென்றுள்ளனா்.
இந்த நிலையில், அன்னை தெரசா பல்கலைக்கழகத்துக்கும், தா்பங்கா பல்கலைக்கழகத்துக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடந்த போட்டியின் போது தமிழ்நாடு வீராங்கனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வந்தது.
தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கடந்த 24-ஆம் தேதி வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பஞ்சாபில் தமிழகத்தைச் சோ்ந்த கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக இருப்பதை அரசு உறுதிசெய்திருப்பதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
இந்த நிலையில், தமிழகத்திலிருந்து பஞ்சாப் சென்ற மேற்கண்ட கபடி குழுவினர் இன்று(ஜன. 28) காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.