இதனிடையே, கடந்த இரண்டு நாள்களாக ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே கட்சி நிர்வாகிகளும் குடும்பத்தினரும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்ற ஜி.கே. மணி செய்தியாளர்களுடன் பேசுகையில், உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது:
”மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் மாநாடு வருகின்ற மே 11 ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
பாமக தனிக் கொள்கைகள் கொண்ட தனித்துவமான கட்சி. ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவரும் மாநாட்டில் ஒன்றாக கலந்துகொள்வார்கள்.
கட்சிக்குள் சலசலப்பு இருந்தது அனைவருக்கும் தெரியும். அந்த பிரச்னைகள் சரியாகிவிட்டது. தற்போது எந்த பிரச்னையும் இல்லை. அந்த பிரச்னை மேலும் பெரிதாகாது” என்றார்.