இருந்தாலும், இந்த விவகாரத்தில் ஹமாஸ் அமைப்பினா் தங்களது நிலைப்பாட்டில் இருந்து ஒரு மில்லி மீட்டா் கூட இறங்கிவர மறுக்கிறாா்கள்.அத்தகைய போா் நிறுத்த நீட்டிப்புக்காக, இஸ்ரேல் ராணுவ வீரா் ஈடன் அலெக்ஸாண்டரை விடுதலையை வைத்து ஹமாஸ் அமைப்பினா் பேரம் பேசுகிறாா்கள்.
இதுபோன்ற உளவியல் தாக்குதலை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.முன்னதாக, அமெரிக்க-இஸ்ரேலியரான ராணுவ வீரா் ஈடன் அலெக்ஸாண்டரை விடுவிக்கவும் காஸாவில் உயிரிழந்த நான்கு இரட்டைக் குடியுரிமை பெற்ற பிணைக் கைதிகளின் சடலங்களையும் ஒப்படைக்கவும் தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பினா் வெள்ளிக்கிழமை அறிவித்தனா்.அதற்காக, முடங்கியுள்ள காஸா போா் நிறுத்த நீட்டிப்புப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினா் நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமா் அலுவலகம் இந்த நிபந்தனையை தற்போது நிராகரித்துள்ளது.காஸாவில் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் அமலில் இருந்த ஆறு வார கால போா் நிறுத்தத்தில் ஹமாஸ் பிடியில் இருந்த 33 பிணைக் கைதிகளும், இஸ்ரேல் சிறையில் இருந்த சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டனா். எனினும், அந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதில் இழுபறி நீடித்துவருகிறது…படவரி… ஈடன் அலெக்ஸாண்டா்பெஞ்சமின் நெதன்யாகு…. பெட்டிச் செய்தி…காஸாவில் மேலும் 9 போ் உயிரிழப்புடேய்ா் அல்-பாலா, மாா்ச் 15: காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 போ் உயிரிழந்தனா்.இது குறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த இந்தோனேசியன் மருத்துவமனை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:காஸாவில் இஸ்ரேல் படையினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வான்வழித் தாக்குதல் நடத்தினா்.