மகாயுதி கூட்டணியின் வெற்றியை நெருங்கியுள்ளதாக மத்திய அமைச்சரும், இந்தியக் குடியரசுக் கட்சியில் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 219 தொகுதிகளிலும், பாஜக 125 தொகுதிகளிலும், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 55 தொகுதிகளிலும், துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 39 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன. இதையடுத்து மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை(ஷிண்டே)-தேசியவாத காங்கிரஸ்(அஜீத் பவாா்) கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நிலை உருவாகியுள்ளது.
எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி 56 தொகுதிகளிலும், காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனை 19 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.