‘புட்ப்ரோ 2024’ உணவு பதப்படுத்துதல் கண்காட்சி: சென்னையில் 3 நாட்கள் நடைபெறுகிறது | foodpro 2024 event in chennai

1289172.jpg
Spread the love

சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) 15-வது பதிப்பு “புட்ப்ரோ 2024” கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.தியாகராஜன் கூறியதாவது: இந்திய தொழில் கூட்டமைப்பு 15-வது ஆண்டாக “புட்ப்ரோ2024” கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சி ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடப்பு ஆண்டுக்கான கண்காட்சியில் உணவு பதப்படுத்துதல் துறையைச் சேர்ந்த 250-க்கும்மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. மேலும், இந்த கண்காட்சிக்கு 25,000 பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு பதப்படுத்துதல் மற்றும் நலிவடைந்த தொழில்களுக்கான பரந்த அளவிலான வாய்ப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து இந்த கண்காட்சியில் ஆலோசிக்கப்பட உள்ளது. இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *