Last Updated : 30 Nov, 2024 08:00 PM
Published : 30 Nov 2024 08:00 PM
Last Updated : 30 Nov 2024 08:00 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் மழைநீர் தண்ணீர் தேங்கியதால் கிழக்கு கடற்கரைச்சாலை மூடப்பட்டது. திரையரங்கில் காட்சிகள் ரத்தானது. புதுச்சேரியில் புயலால் தொடர் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பலபகுதிகளிலும் தற்போது தேங்கத் தொடங்கியுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் பாக்குமுடையான்பட்டு முதல் சிவாஜி சிலை வரை தண்ணீர் அதிகளவில் தேங்கியுள்ளது. இதனால் கிழக்கு கடற்கரைசாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. லாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் சிவாஜி சிலை வழியாகவோ, கொக்கு பார்க் வழியாகவோதான் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
திரையரங்கு காட்சிகள் ரத்து: தொடர் மழை பொழிவு காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவு 34ன் கீழ் புதுச்சேரியில் இன்று மாலை, இரவு காட்சிகளை ரத்து செய்து ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டார். புதுச்சேரியில் காலை 8.30 முதல் மாலை 5.30 வரை 95.8 மிமீ (9.58செ.மீ) மழை பதிவானது. தொடர் மழையால் புதுச்சேரி பிரதான சாலையான ஆம்பூர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் நகரில் டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்துக்குள்ளானது உட்பட சிறு விபத்துகள் நிகழ்ந்தன.
FOLLOW US
தவறவிடாதீர்!