பொங்கல் வெளியீட்டை உறுதிசெய்த வணங்கான்!

Dinamani2f2024 12 302firdxv59f2fscreenshot 2024 12 30 122117.png
Spread the love

வணங்கான் திரைப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

நடிகர் சூர்யா வணங்கான் திரைப்படத்திலிருந்து விலகியது குறித்து இயக்குநர் பாலா விளக்கமளித்துள்ளார்.

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: டிமான்டி காலனி – 3 பணிகள் துவக்கம்!

ஆனால், விடாமுயற்சி, கேம் சேஞ்சர் உள்ளிட்ட பெரிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் வணங்கானுக்கு அதிக திரைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்ற தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகின.

இந்த நிலையில், அத்தகவல்களை மறுக்கும் விதமாக 2025, ஜனவரி 10 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக வணங்கான் திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *