மகளிர் பிரீமியர் லீக் எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 214 ரன்கள் இலக்கு!

Dinamani2f2025 03 132fpjrcm23u2fgl7ptdcasaaah08.jpg
Spread the love

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டி மும்பையில் இன்று (மார்ச் 13) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் முதலில் விளையாடியது.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிடும் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்!

மும்பை இந்தியன்ஸ் – 213/4

மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீராங்கனைகளாக யாஷிகா பாட்டியா மற்றும் ஹேலி மேத்யூஸ் களமிறங்கினர். யாஷிகா பாட்டியா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், ஹேலி மேத்யூஸ் மற்றும் நாட் ஷிவர் பிரண்ட் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஹேலி மேத்யூஸ் 77 ரன்களும் (10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), நாட் ஷிவர் பிரண்ட் 77 ரன்களும் (10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 12 பந்துகளில் அதிரடியாக 36 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது.

குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் டேனியல் கிப்ஸன் 2 விக்கெட்டுகளையும், கஷ்வி கௌதம் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாட விரும்பும் கே.எல்.ராகுல்!

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *