மகிழ்ச்சியான செய்தி! கோவை – திருப்பதி ரயிலில் நவீன எல்எச்பி பெட்டிகள் இணைப்பு

Dinamani2f2025 03 202ftfyff2152fkovaitrain.jpg
Spread the love

கோவை : கோவையிலிருந்து திருப்பதி செல்லும் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், கோவை – திருப்பதி ரயிலில் நவீன எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாராகி வரும் எல்.எச்.பி எனப்படும் அதிநவீன ரயில் பெட்டிகள் நீண்ட தூர அதிவிரைவு ரயில்களுக்கு பொருத்தப்படுகிறது.

சாதாரண ரயில் பெட்டிகளை விட இந்தப் பெட்டிகளில் கூடுதலாக பயணிகள் பயணம் செய்யலாம், மற்ற ரயில் பெட்டிகளை விட எடை குறைந்தவை என்பதால் அதிவேகமாக இயக்க சௌகரியமாக இருக்கும்.

ஒவ்வொரு பெட்டியிலும் டிஸ்க் பிரேக் சிஸ்டம் இணைக்கப்படுவதால் வேகமாக பயணித்தாலும், சரியான இடத்தில் நிறுத்த முடியும். விபத்தின் போது ஒரு பெட்டி, மற்றொரு பெட்டியுடன் மோதி சேதமடையாது. இந்தப் பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது. அதிர்வு இல்லாமல் பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

அத்துடன் சொகுசு இருக்கைகள், செல்போன் சார்ஜர் வசதி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். எல்.எச்.பி. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டியில் 80 இடங்களும், ஏ.சி. பெட்டியில் படுக்கை வசதி கொண்ட 72 இடங்களும் இருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *