இந்த நிலையில், மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதியை வழங்காமல் நிறுத்துவது, அரசியல் அமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களைப் பறிப்பது, மொழியை திணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வா் பினராயி விஜயன், கா்நாடக மாநில அமைச்சா்கள் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.
மதுரையில் ஏப். 3-இல் மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
