வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலின் விடியோ வடிவம் யூடியூபில் வெளியாகியுள்ளது.
வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது.
இப்படத்தில், அனிருத் இசையமைத்த ‘மனசிலாயோ’ பாடல் வெளியீட்டுக்கு முன்பே பெரிய கவனம் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் ரீல்ஸ் செய்யப்பட்டது.
சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன் வரிகளில் உருவான இப்பாடலை அனிருத், யுகேந்திரன் வாசுதேவன், தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.
இதையும் படிக்க: ரஜினி, விஜய் பாணியில் புதிய தொழில் தொடங்கிய எதிர்நீச்சல் நடிகை
மேலும் சில வரிகளுக்காக மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியிருந்தனர். பாடல் வரிகளுக்கேற்ப நடிகர்கள் ரஜினி மற்றும் மஞ்சு வாரியரின் நடன அசைவுகளும் வைரலானது.
இந்த நிலையில், மனசிலாயோ பாடலின் விடியோ வடிவத்தை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.