மன்மோகன் சிங் காலமானார்!

Dinamani2f2024 12 262fcb62og6y2fmanmohan Singh Passed Away Edi 2.jpg
Spread the love

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று (டிச. 26) காலமானார். அவருக்கு வயது 92.

இந்தத் தகவலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று மாலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், உயிர் பிரிந்தது.

1991 – 96 வரை முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான ஆட்சியில், நிதித் துறை அமைச்சராக செயல்பட்டார். கல்வியாலும், நிதித் துறை நிர்வாக அனுபவத்தாலும் பொருளாதாரவியல் வல்லுநரான மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.

2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *